Property registration guide : patta sitta adangal fmb pathiram online

Whether you are buying a land/plot or house or apartment/flat, whatever verifying all documents before making agreement and taking all the documents is necessary to avoid any scams:

Sale Deed Document(pathiram) is registration department's record (

This only is not enough to claim as your property. The following documents also required to claim/prove your possession of property in the court in case of any dispute:

Patta/TSLR is a revenue department record maintained by thasildar

Chitta is a revenue department record maintained by vao 

Adangal is for agricultural land mentions the crop detailed

A registar 

FMB Field measurement book (Topo sketch)



In all the empty land/agricultural land/house document the following details are mentioned:

Survey number/Town Survey TS Number, Sub division number, Plot number, 

District name, Taluka, Ward, Block


WEBSITE FOR VILLANGAM EC by registration department

https://tnreginet.gov.in/portal/webHP?requestType=ApplicationRH&actionVal=homePage&screenId=114&UserLocaleID=en&_csrf=ed8ff27b-df22-42be-9814-eebf15adc295


PATTA/CHITTA/FMB by revenue department

https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta.html?lan=en


Ward/block details

http://www.salem.tn.nic.in/delimit.htm


Documents required additionally: 

For Agricultural land: Sitta & Adangal

For House: Property tax , Drainage tax, Electricity bill, Water tax



சொத்துகள் வாங்கும்போது:


சொத்துகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும். 

நிலப் பதிவேடு - நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு)

பட்டா:

நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா:

ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடங்கல்

ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.


நாம் வாங்கும் சொத்துக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் கிரயப்பத்திரத்துக்கு முந்தைய பத்திரம் தான் தாய் பத்திரம் எனப்படுகிறது.



பத்திரப் பதிவு ஆவணத்தை விற்பனை ஆவணம் (Sale Deed) என்று சொல்வார்கள்.  சொத்தின் மதிப்பில்(மனை+கட்டிடம்) 7 சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், 1 சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் வசூலிப்பார்கள். 

Testimonials